சென்னை: நீட் தேர்வில் வெற்றிபெற்று இன்று கலந்தாய்வுக்கு வந்த ஓய்வுபெற்ற தர்மபுரி ஆசிரியர், தனது இடத்தை மற்றொரு மாணவருக்கு விட்டுக்கொடுத்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆசிரியரின் தாராள குணம் போற்றப்படுகிறது.
தர்மபுரியைச் சேர்ந்த 61 வயதான சிவப்பிரகாசம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சிவப்பிரகாசம் . இவர் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் வெற்றி பெற்று இன்று நடைபெற்ற கலந்தாய்வில் கலந்துகொண்டார். அரசுப் பள்ளியில் படித்தவர் என்பதால் 7.5% இடஒதுக்கீட்டிற்கான தரவரிசையில் 249-வது இடம் பிடித்துள்ளார். டாக்டராக வேண்டும் என்பது எனது சிறுவயது ஆசைiய நிறைவேற்றவே நீட் தேர்வை எதிர்கொண்டதாக கூறி, கல்விக்கு வயது ஒரு தடையல்ல’ என்பதை நிரூபித்து சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து இன்று சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் மருத்துவ கவுன்சிலிங்கில் கலந்துகொண்டார். எனது வாய்ப்பை வேறொரு மாணவருக்கு வழங்க யோசித்து வருகிறேன்” என கூறினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசத்தின் மாணவர் ஒருவர் 5வது ரேங்க் பெற்று அதே கவுன்சிலிங் கலந்தாய்வில் பங்கேற்ற நிலையில், தனக்கு கிடைத்த இடத்தை, அவர் அந்த மாணவருக்கு வழங்கி வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.
கலந்தாய்வில் பங்கேற்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசம் (61வயது) எந்த கல்லூரியை தேர்வு செய்யவில்லை. வேறு அரசுப்பள்ளி மாணவருக்கு மருத்துவ கல்வி வாய்ப்பு கிடைக்கட்டும் என விட்டுக்கொடுத்துள்ளார்.
மகனின் கோரிக்கையை ஏற்று ஓய்வுபெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசம் விட்டு கொடுத்துள்ளார்.. நீண்ட காலம் சேவையாற்ற முடியாது என்பதால் மருத்துவப்படிப்பு இடத்தை விட்டுக்கொடுத்ததாக கூறப்படுகிறது.