சென்னை: மாநகராட்சி பொறியாளரை தாக்கியது தொடர்பாக  திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவொற்றியூர் தொகுதியிலிருந்து முதல்முறையாக சட்டப்பேரவைக்கு தேர்வானவர் கே.பி.சங்கர். இவர்  மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமியின் சகோதரர். இவரை திமுக தலைமை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், திருவொற்றியூர் மேற்குப் பகுதி செயலாளர் பொறுப்பிலிருந்து கே.பி. சங்கர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை திருவொற்றியூரில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டட விபத்தின்போது, அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட வருக்கு வீடு கட்டித் தருவதாகவும், அவர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை தானே வாங்கி தருவதாகவும் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பொறியாரை தாக்கியது தொடர்பாக கேபி சங்கர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் சாலை அமைக்கும் பணியை ஒப்பந்ததாரர்களுடன தகராறு செய்து, அதை நிறுத்திய நிலையில், அங்கு ஆய்வு செய்ய வந்த மாநகராட்சி பறக்கும்படை பொறியாளரை, கே.பி.சங்கரின் உதவியாளர் அடித்து உதைத்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து, கே.பி.சங்கரின் கட்சி பதவி பறிக்கப்பட்டு உள்ளது.