எலிசபெத் டெய்லர் பிறந்தநாள் (1932)
பிரபல ஆங்கிலோ-அமெரிக்க நடிகை. அவர் தன்னுடைய நடிப்புத் திறன் மற்றும் அழகுக்காக மட்டுமின்றி, பல திருமணங்கள் செய்துகொண்டதற்காகவும் பேசப்பட்டவர். அமெரிக்க திரைப்பட நிறுவனம் தன்னுடைய தலைசிறந்த பெண்கள் பட்டியலில் டெய்லரை ஏழாவது இடத்தில் வைத்திருக்கிறது.
டெய்லர் ஏழு கணவர்களுடன் எட்டு முறை திருமணம் ஆனவர்:
- கான்ராட் “நிக்கி” ஹில்டன் (மே 6, 1950 முதல் ஜனவரி 29, 1951 வரை) (விவாகரத்து)
- மைக்கெல் வைல்டிங் (பிப்ரவரி 21, 1952 முதல் ஜனவரி 26, 1957 வரை) (விவாகரத்து)
- மைக்கெல் டோட் (பிப்ரவரி 2, 1957 முதல் மார்ச் 22, 1958 வரை) (விதவையாக்கப்பட்டார்)
- எட்டி ஃபிஷ்ஷர் (மே 12, 1959 முதல் மார்ச் 6, 1964 வரை) (விவாகரத்து)
- ரிச்சர்ட் பர்டன் (மார்ச் 15, 1964 முதல் ஜூன் 26, 1974 வரை) (விவாகரத்து)
- ரிச்சர்ட் பர்டன் (மீண்டும்) (அக்டோபர் 10, 1975 முதல் ஜூலை 29, 1976 வரை) (விவாகரத்து)
- ஜான் வார்னர் (டிசம்பர் 4, 1976 முதல் நவம்பர் 7, 1982 வரை) (விவாகரத்து)
- லார்ரி ஃபோர்டன்ஸ்கி (அக்டோபர் 6, 1991 முதல் அக்டோபர் 31, 1996 வரை) (விவாகரத்து)
எலிசபெத் டெய்லர் பல ஆண்டுகளாக பல்வேறு நோய்களினால் பாதிப்புக்குள்ளானார். 2004ம் ஆண்டு ல் இவருக்கு இதய நோய் ஏற்பட்டது, 2009 இல் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. . மார்ச் 23, 2011 இல் தனது நான்கு மக்களும் சூழ்ந்திருக்க கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலெஸ் நகர் மருத்துவமனை ஒன்றில் தனது 79வது வயதில் காலமானார்.
சுஜாதா நினைவுதினம் (2008)
பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன். தனது மனைவியின் பெயரில் சிறுகதை , நாவல்கள் எழுதி பிரபலமானார். இவரது சில கதைகள் திரைப்படங்களாக வெளியாகி உள்ளன.
மே 3, 1935 அன்று ஸ்ரீரங்கத்தில் பிறந்த இவர், பொறியியில் பட்டம் பெற்றவர். கட்டுரைகள், அறிவியல் புனை கதைகள் ஆகியவற்றையும் எழுதியவர்.
பூக்குட்டி என்ற இவரது நாவல், சிறுவர் இலக்கியத்துக்கு இவர் அளித்த கொடையாகும்.
கோத்ரா ரயில் எரிப்பு (2002)
குஜராத்தில் முஸ்லீம்களுக்கெதிரான கலவரத்துக்குக் காரணமான கோத்ரா இரயில் பெட்டி எரிப்பு நடந்த தினம் இன்று. 2002ம் ஆண்டு இதே தினத்தன்று, அயோத்தியிலிருந்து, திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் குஜராத்தில் கோத்ரா எனும் ரயில் நிலையத்தில் சங்கிலி இழுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. அந்த ரயிலின் எஸ் -7 என்ற கோச் வண்டியை சில முஸ்லீம்கள் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தியதாக் குஜராத் அரசு தரப்பில் கூறப்பட்டது.
அந்த பெட்டி முற்றிலுமாக எரிந்ததில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 57 கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் பெரும் கலவரம் வெடித்தது. முஸ்லீம் மக்கள் ஆயிரக்கணக்கானோர் இந்து மத தீவிரவாதிகளால் பலவித வன்முறைகளில் கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் குஜராத்தின் அப்போதைய முதன்மந்திரி நரேந்திரமோடியின் உத்தரவுக்கு ஏற்ப அரசு எந்திரங்களின் துணையோடு பா. ஜ. க தொண்டர்கள் இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டதாகவும் இந்திய மற்றும் உலக ஊடகங்கள் குற்றம் சாட்டின.