எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் நல்ல வசூலைப் பார்த்தது. இதனைத் தொடர்ந்து பாகுபலி 2 வும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், பாகுபலி-3 Before the Beginning என்ற பெயரில் நெட்பிளிக்ஸ் நிறுவன தயாரிப்பில் படமாக்கப்பட்டு வந்தது.
மிர்னாள் தாக்கூர் கதாநாயகியாக நடித்து வந்த இந்த படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி-க்கு பதில் தேவா கட்டா இயக்கப்போவதாக முதலில் கூறப்பட்டது.
இப்போது வரை உருவாகியுள்ள இந்த படத்தின் காட்சிகள் திருப்திகரமாக இல்லை என்று கூறி இந்த படத்தை கைவிடப்போவதாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பாகுபலி 3 தயாரிப்புக்கு இதுவரை 150 கோடி ரூபாய் செலவாகி இருப்பதாக கூறப்படுகிறது.