சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் மற்றும் பொதுஊரடங்கு காரணமாக, கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.அதைத்தொடர்ந்து மாநில அரசுகளும், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படை உயர்வை நிறுத்தி வைத்தது. கொரோனாவால் ஏற்படும் நிதிச் சுமையை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பின்னர் கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் அகவிலைப்படை மீண்டும் வழங்கப்படும் என அறிவித்து மத்தியஅரசு அறிவித்து, ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் 2022ம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி இந்த மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறும் அகவிலைப்படி உயர்வு செய்யப்பட்டு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.