2019 ம் ஆண்டு தனது 13 வயதில் உலகின் சிறந்த திறமையுள்ளவர் என்ற விருதை பெற்ற பியானோ கலைஞர் லிடியன் நாதஸ்வரம் இசைஞானி இளையராஜாவிடம் மாணவராக சேர்ந்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் முதல் மாணவர் நான் தான் என்று இளையராஜா தன்னிடம் கூறியதாக பதிவிட்டுள்ள லிடியன் நாதஸ்வரம் அவரது ஒரே மாணவரும் இவர்தான் என்று கூறியுள்ளார்.
16 வயதாகும் லிடியன் நாதஸ்வரம் மூன்றாண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் சி.பி.எஸ். தொலைக்காட்சி நடத்திய போட்டியில் பங்குபெற்று விருது வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Dear all, I’m very happy to inform you all that my music teacher “Maestro Isaignani Ilaiyaraaja uncle” said that I’m his First and one and only student in his experience..and he teaches me everyday with so much love and care…I need all your blessings too..Thank you one and all pic.twitter.com/r1qyRvrcYW
— Lydian Nadhaswaram Official (@lydian_official) January 24, 2022
ஏற்கனவே, இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் இசைப்பள்ளியில் பயின்று வந்த இளம் இசைக்கலைஞரான லிடியன் நாதஸ்வரம் தற்போது இளையராஜாவிடம் இசை பயிற்சியில் சேர்ந்துள்ளார்.