சென்னை

நேற்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சென்னை கர்னூல் விமானம் 2 பயணிகளுடன் இயங்கி உள்ளது.

சென்னை உள்நாட்டு விமான நிலயத்தில் கொரோனா தொற்று 3-வது அலைக்கு முன்பு தினசரி சுமார் 170-180 விமானங்கள் இயக்கப்பட்டன. இதைப் போல் பயணிகள் எண்ணிக்கையும் 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரமாக இருந்தது.  ஆனால் 3-வது அலை தொடங்கிய பிறகு, பயணிகள் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.

நேற்றைய முழு ஊரடங்கால் குறைவான அளவில்மட்டுமே விமான சேவை இருந்தது.  இதைப் போல் பயணிகள் எண்ணிக்கையும் 12 ஆயிரமாக குறைந்தது.   இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் 9 பயணிகள், மதுரை விமானத்தில் 12 பேர், திருச்சி விமானத்தில் 14 பேர், மைசூர் விமானத்தில் 16 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.

குறிப்பாக சென்னை – கர்னூல் விமானத்தில் இரண்டு பயணிகள்  மட்டுமே சென்றுள்ளனர்.   அதே வேளையில் சென்னையில் இருந்து கோவை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தாவுக்கு இயக்கப்பட்ட விமானங்களில் பயணிகள் கூட்டம் வழக்கம் போல இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.