டில்லி
இந்தியப் பொருளாதாரத்தில் சில அம்சங்கள் நம்பிக்கை அளிப்பதாகவும் பல அம்சங்கள் கவலை தருவதாக்வும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.
முன்னாள் ரிச்ர்வ் வங்கி ஆளுநரான ரகுராம் ராஜன் ஒரு பொருளாதார நிபுணர் ஆவார். இவர் பணமதிப்பிழப்பு நேரத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பணி புரிந்தார். பண மதிப்பிழப்பு குறித்து பிரதம்ர் மோடி தன்னுடன் ஆலோச்கிக்காமல் முடிவு எடுத்ததாக அவர் குற்றம் சாட்டினார். இதையொட்டி தமது பதவியை ரகுராம் ராஜன் ராஜினாமா செய்தார்.
தற்போது அமெரிக்காவில் பொருளாதார பேராசிரியராகப் பணி புரியும் ரகுராம் ராஜன் இந்திய பொருளாதாரம் குறித்து தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “பொதுவாகப் பொருளாதாரத்தில் K-வடிவ மீட்சி என்ற ஒன்று உல்ளாது. கொரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் அது K-வடிவ மீட்சியை நோக்கிச் செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இது போன்ற மீட்சியில், தொழில்நுட்ப துறையும், பெரும் நிறுவனங்களும் லாபகரமாக செயல்படும். ஆனால் அதே வேளையில் சிறு, குறுந் தொழில்கள் கடனில் சிக்கித் தவிக்கும். இப்போது இந்திய பொருளாதாரத்தில் நம்பிக்கை தரும் சில அம்சங்கள் இருந்தாலும், கவலைத் தரக்கூடிய பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் பெரிய நிறுவனங்களின் லாப விழுக்காடு நன்றாக இருப்பது, மென்பொருள் துறைகள் சிறப்பாகச் செயல்படுவது, புத்தாக்க நிறுவனங்கள் அதிகரிப்பது உள்ளிட்டவை இந்தியப் பொருளாதாரத்தில் நம்பிக்கை தரும் அம்சங்கள் ஆகும். ஆனால், வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு, நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பது, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நிதிச் சிக்கலைச் சந்தித்திருப்பது உள்ளிட்டவை கவலைத் தரும் அம்சங்கள் ஆகும்.
இந்தியா பொருளாதாரத்தில் மீண்டு வரும் சூழலில் ஒமிக்ரான் தாக்கியுள்ளது. இது இந்தியாவில் மருத்துவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்னடைவை ஏற்படுத்தும்“ என எச்சரித்துள்ளார்.