ஹைதராபாத்: ஆந்திராவில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர ராமானுஜர் சிலையை பிப்ரவரி 5ந்தேதி பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த சிலையானது, திருப்பதி ஜீயர் அறக்கட்டளையால் ஹைதராபாத்தில் உள்ள சம்ஷாபாத்தில் உள்ள ஸ்ரீராம் நகரில் உள்ள ஜீவா ஆஸ்ரமத்திற்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர் ராமானுஜர். வைஷ்ணவ குருவான இவர் தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களுக்கும் சென்று ஆன்மிக சேவையாற்றி உள்ளார். ஆந்திராவிலும் பல ஆண்டுகள் தங்கி ஆன்மிக பணியாற்றியதாக கூறப்படுகிறது. தீண்டாமையை எதிர்ப்பதில் முன்னணியில் திகழ்ந்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராமானுஜர் செய்த கைங்கர்யம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏழுமலையான் கோயிலில் உள்ள மூலவர் சிலை எந்த கடவுளை குறிக்கும் என்பதில் சர்ச்சை எழுந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமானுஜர் சுவாமியை அலங்கரிக்கப்படும் ஆபரணங்களை கோயிலுக்குள் கொண்டு சென்று வைத்தார். மறுநாள் காலை கதவை திறந்தபோது, சுவாமியின் கைகளில் சங்கு, சக்கரம் இருப்பதை வைத்து, கோயிலுக்குள் இருப்பது பத்மாவதி தாயாரின் கணவரான மகாவிஷ்ணுவின் அவதாரமாக விளங்கும் வெங்கடேஸ்வர சுவாமி என்பதை உறுதிப்படுத்தினார். இதனால் ராமானுஜருக்கு ஆந்திர மக்களிடையே மிகுந்த மரியாதையும், ஈடுபாடும் ஏற்பட்டது.
தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தை கவுரவிக்கும் வகையில், சமத்துவத்துக்கான சிலை என்ற பெயரில், ராமானுஜரின் 216 அடி உயர சிலையை திருச்சி ஜீயர் அறக்கட்டளை அமைத்துள்ளது. இந்த சிலையானது தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் துத்தநாகம் என ஐந்து விதமான உலோகங்களை பயன்படுத்தி இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.
சமத்துவத்துக்கான சிலை (Statue of Equality) என என்ற பெயரில் ராமானுஜரின் சிலை அமைக்க அடிக்கல் கடந்த 2014-இல் நாட்டப்பட்டது. சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் இந்த சிலை அமை;ககும் பணி நடைபெற்று வந்தது. சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு, சிலை அமைக்கும் பணிகள் முழுமையான முடிவடைந்துள்ளதால், வரும் பிப்ரவரி மாதம் 5ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி சிலையை திறந்து வைக்கிறார்.
இந்த சிலையை நிறுவுவதற்கான மெல்கோட் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் உள்ள ராமானுஜரின் செதுக்கப்பட்ட கல் உருவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 216 அடி உயரத்தில் உலகிலேயேயே இரண்டாவது மிக உயர்ந்த சிலையாக அமர்ந்த கோலத்தில் ராமானுஜர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.