சென்னை: தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் தமிழக கல்லூரி மாணவ மாணவியருக்காக நடத்த இருக்கும் பேச்சுப் போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மாணாக்கர்களுக்கு முதல் பரிசு ₹1 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மேலும், இந்த போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.