சென்னை:
பாஜக அரசாங்கம் தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்க நினைக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக ஊர்தி சென்னையில் நடைபெறும் விழாவில் இடம் பெறும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முதலமைச்சர் மிகுந்த மன வருத்தத்துடன் இந்த அறிக்கையை அளித்திருக்கிறார். இந்தியாவின் ஆட்சி முறை என்பது கூட்டாட்சி தத்துவம், மாநிலங்கள் சேர்ந்த்தது தான் மத்திய அரசு, குடியரசு தினத்தில் பங்கேற்க விருந்த அலங்கார ஊர்திகள் நமது தலைவர் என்ன செய்தார்கள் என்பதையும், அவர்களது பிரதிபலிப்பு என்ன என்பதயும் தெளிவுபடுத்தியுள்ளோம். இப்படி இருந்தும் தமிழக தமிழக ஊர்தி குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. ஜனநாயகத்தின் குரவாளையை நெரிக்கும் செயலாகும் என்றும் அவர் கடுமையாக சாடினார்.