தராபாத்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா தனது கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர்களின் வாரிசுகள் விவாகரத்து செய்து கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.  நடிகர் நாகர்ஜுனா மகனும் பிரபல நடிகருமான நாக சைதன்யாவை அவரது மனைவியும் நடிகையுமான சமந்தா விவாகரத்து செய்தார்.  அடுத்ததாக ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் பிரிவதாக அறிவித்தார்.

தற்போது நடிகர் சிரஞ்சீவி மகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா முதலில் சிரிஷ் பரத்வாஜ் என்பவரைத் திருமணம் செய்தார்.    அவர் தன்னை சித்ரவதை செய்வதாகப் புகார் கூறிய நிலையில் கடந்த 2011ம் ஆண்டு அவரை ஸ்ரீஜா பிரிந்தார். பிறகு நடிகர் கல்யாண் தேவ் என்பவரை 2016ல் அவர் திருமணம் செய்தார்.

இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார். தற்போது கல்யாண் தேவ்க்கும் ஸ்ரீஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் பரவியது.  சமூக வலைத்தளத்தில் தனது பெயருடன் இருந்த கல்யாண் என்கிற பெயரை ஸ்ரீஜா நீக்கிவிட்டு, தனது தந்தையின் குடும்ப பெயரான கொனிடேலா என்பதைச் சேர்த்துள்ளார்.

இதையொட்டி இவர்கள் இருவரும் பிரிவது உறுதியாகியுள்ளதாகத் தெலுங்கு திரைப்பட வட்டாரத்தில் பேசப்படுகிறது.