துருக்கி
துருக்கி நாட்டில் நடைபெறும் வலு தூக்கும் போட்டியில் ராசிபுரம் விவசாயி மகள் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார்
துருக்கி நாட்டில் தற்போது சர்வதேச அளவில் வலுதூக்கும் (POWERLIFTING) போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த இலக்கியா என்னும் 22 வயதுப் பெண் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை பெற்றுள்ளார்.
இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் தந்தை ஒரு விவசாயி ஆவார்.
இது குறித்து இலக்கியா, “எனக்கு இந்த வெற்றி பெருமையாக உள்ளது. அடுத்ததாக காமன்வெல்த் போட்டியில் கல்ந்துக் கொண்டு தங்கம் வெல்வதே எனது லட்சியம் ஆகும். ஒலிம்பிக்கில் வலுதூக்கும் போட்டியை சேர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.