மும்பை: உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடிப்போம் என்று கனவு கண்டுள்ள யோகி தலைமையிலான பாஜக ஆட்டம் கண்டுள்ளது. யோசி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 2 அமைச்சர்கள் 5 எம்எல்ஏக்கள் என அடுத்தடுத்து, ஒன்றன் பின் ஒன்றராக, பாஜகவில் இருந்து விலகி, சமாஜ்வாதி கட்சியில் இணைந்து வருகின்றனர். இது பாஜகவுக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஏற்கனபே ஓராண்டாக காங்கிரஸ் பொதுச்செய லாளர் பிரியங்கா காந்தி முகாமிட்டு, யோகி அரசுக்கு எதிராக மக்களை திரட்டி வருகிறார். பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி, வேலைவாய்ப்பு என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
அங்கு தற்போது நடைபெற்று யோகி ஆட்சியை அகற்றி விட்டு, காங்கிரஸ் ஆட்சியை அமைக்க தீவிரமாக பணியாற்றி வருகிறார். அதே வேளையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள யோகி தலைமையிலான பாஜகவும் போராடி வருகிறது. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் மாநிலக் கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடையே போட்டிகள் நிலவுகின்றன.
இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சி, யோகி அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்கள், எம்எல்ஏக்களை தனது கட்சிக்கு அழைத்து வந்து, யோகிக்கு பயத்தை காட்டி உள்ளது. மாநில சட்ட தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, ஆளும் கட்சியான பா.ஜ.க.வில் இருந்து இதுவரை 2 அமைச்சர்கள் மற்றும் 7 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் முக்கியத் தலைவராக கருதப்படும் அமைச்சர் சுவாமி பிரசாத் மவுர்யா, தனது பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.க.விலிருந்து விலகினார். அவரைத்தொடர்ந்து, மவுர்யாவுக்கு ஆதரவு அளித்து, ரோஷன் லால் வர்மா, பகவதி பிரசாத் சாகர், பிரஜேஷ் பிரஜபதி ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.விலிருந்து விலகி சமாஜ்வாதியில் இணைந்தனர். அடுத்து, பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான தாரா சிங் சவுகான், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷிடம் சரணடைந்துள்ளார்.
மேலும், மற்றொரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. அவதார் சிங் பாடானா கட்சியிலிருந்து விலகி, சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியான ராஷ்ட்ரீய லோக் தளத்தில் இணைந்தார். இப்படி 2 நாட்களில் 6 பேர் விலகியது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 7-வது எம்.எல்.ஏ முகேஷ் வர்மா பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். கடந்த 48 மணி நேரத்தில், 2 அமைச்சர்களும், 5 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் விலகி உள்ளதால், ஆளுங்கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.
தனது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிர்க்கட்சிகளே இல்லை என்று மார்தட்டிய பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, அடுத்தடுத்து பாஜக எம்எல்ஏகள் கட்சியி விட்டு ஓடுவது கிலியை ஏற்படுத்தி உள்ளது.
சிவசேனா தனித்து போட்டி: பலமுனை போட்டிகளுடன் களம் காணும் உத்தரபிரதேசம்