சென்னை: தமிழ்க ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
நாடு முழுவதும் முன்களப் பணியாளர்கள், 60வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 10ந்தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், இரு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 3வது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது.
இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் முதியோர்கள் தடுப்பூசி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் உள்ள ஓமந்துரார் அரசு மருத்துவக் கல்லூரியில் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டார்.