சென்னை: தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், தலைமைச்செயலாளர் உள்பட ஆயிரக்கணக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட உயர் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த இடமாற்றம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.
இன்று மேலும் ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழகஅரசு இடம்மாற்றம் செய்து அறிவித்துள்ளது. அதன்படி, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையராக பிரகாஷ் நியமனம். தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக சுதீப் ஜெயின் நியமனம். எல்காட் நிறுவனத்தின் செயல் இயக்குநராக அருண்ராஜ் நியமனம்.
இதற்கான உத்தரவை தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார்.