டெல்லி: ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை 12ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது ஆவின், மின்சாரம், இந்து சமய அறநிலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் மூன்று கோடி பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக குற்றச்சாடுடு உள்ளது. இதுதொடர்பாக கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜி கடந்த வாரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி முன்ஜாமின் கேட்டு, உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்ததார். கடந்த விசாரணையின் போது, தமிழகஅரசை கடிந்துகொண்ட நீதிபதிகள் விசாரணையை 10ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு ஒருமாதம் ஜாமீன் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அப்போது தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 1000பேர் சிறைகளில் இருக்கும் போது ஒரு நாள் கூட இவரால் சிறையில் இருக்க முடியதா? என கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகஅரசு தாக்கல் செய்யும் கூடுதல் ஆவணங்களை பார்த்துவிட்டு ஜாமீன் வழங்குவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க கோரி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Patrikai.com official YouTube Channel