சென்னை:
சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 318 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல் நாளான நேற்று முன்தினம் இரவு 10:00 மணியில் இருந்து அதிகாலை 5:00 மணி வரை, ஊரடங்கு விதிகளை மீறியது தொடர்பாக, 501 இரு சக்கர வாகனங்கள், 32 ஆட்டோக்கள், 14 கார்கள் என, 716 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.விதிமீறல் கண்காணிப்பு பணிக்கு, சென்னை முழுதும், 312 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
போலீஸ் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உடன், முக கவசம் அணியாதது தொடர்பாக, 462 வழக்குகளும், விதிகளை மீறியதாக, ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக, ஒரு கார் உட்பட 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.