சென்னை: 
சென்னையில் நேற்று  நடைபெற்ற 13 திருமணங்களில் கொரோனா விதிமுறையை மீறல் நடைபெற்றுள்ளது  என்று  அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  சென்னையில் நேற்று 13 திருமணங்களில் கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது; விதிமுறைகளை மீறும் தனியார் மருத்துவமனைகள், கடைகள், மண்டபங்களை மூடும் நிலைக்கு அரசைத் தள்ள வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பா? என்ற விளக்கம்  அளித்த  அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று ம்,  பொருளாதார பாதிப்பு மற்றும் மக்களுக்குப் பாதிப்பு  ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதில் முதலமைச்சர்  உறுதியாக உள்ளார் என்றும் அவர் கூறினார்.