நடிகர் மகேஷ்பாபு சகோதரர் மரணம் : இறுதிச் சடங்குக்கு மகேஷ்பாபு வர முடியாத நிலை

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளரும் நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரருமான ரமேஷ் பாபு மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மூத்தமகன் ரமேஷ்பாபு  ஆவார். சுமார் 58 வயதாகும் இவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.  ரமேஷ்பாபுவின் இளைய சகோதரர் மகேஷ்பாபு தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக உள்ளார்.

ரமேஷ்பாபுவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  அவரை கச்சிபவுலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  ஆனால் ரமேஷ்பாபு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.   இது தெலுங்கு திரையுலகைக் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

ரசிகர்களும் தெலுங்கு திரையுலக பிரமுகர்களும் சமூக வலைத்தளங்களில் ரமேஷ்பாபுவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  ஆனால் ரமேஷ்பாபுவின் சகோதரர் மகேஷ்பாப்வுக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  ஆகவே அவர் தனது சகோதரர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வர முடியாத நிலை உள்ளது.