சென்னை: கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டபேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு சட்டபேரவை [புத்தாண்டு கூட்டத்தொடர் 3வது நாளாக சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இன்று கேள்வி – பதில் நேரத்துடன் தொடங்கி சட்டப்பேரவையில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இதையடுத்து, பல சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அத்துடன், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்து கூட்டுறவு சங்கங்களை கலைப்பது குறித்த சட்டமசோதா சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்கிறார். இந்த மசோதாவில், கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டாக குறைக்கப்பட உள்ளது.
இதன் காரணமாக, கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.