சென்னை
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி உள்ளது.
இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கி உள்ளது. பேரவையில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உரையாற்றி வருகிறார். இந்த ஆளுநர் உரையை விடுதலை சிறுத்தை கட்சி புறக்கணித்துள்ளது. அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்துள்ளனர்.
ஆளுநர் ரவி தனது உரையில்
“தமிழக அரசு இலங்கை தமிழர் நலனுக்காக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகின்றன.
ஒமிக்ரான் பரவல் தமிழக உள்ளிட்ட பல மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஒமிக்ரான் பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியை மக்கள் இயக்கமாக மாற்றி 2ஆம் அலையை திறம்படக் கையாண்ட தமிழக முதவ்லவ்ரை பாராட்டுகிறேன். தமிழகம் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை உறுதி செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அண்மையில் ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில் சிறந்த முதல்வராக நமது முதல்வர் தேர்வாகி உள்ளார். அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் குறுகிய நாட்களில் இந்த பெயரை பெற்றுள்ளது பெருமைக்குரியது ஆகும்.”
எனத் தெரிவித்துள்ளார்.