டெல்லி: நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் பாஸ்டேக் வசூல் கடந்த டிசம்பர் மாதம் ரூ.3,679 கோடி ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அளவில் வசூலித்துள்ளது. மேலும், கடந்த நவம்பர் மாதத்தை விட 502 கோடி ரூபாய் அதிகம்.
நாடு முழுவதும், சாலை பராமரிப்புக்காக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் அமைத்து வாகனங்களுக்கு வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான டிஜிட்டல் முறையில் பாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டண வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வசூல் கடந்த டிசம்பர் மாதத்தில் வரலாறு காணாத அளவில் உச்சம் தொட்டுள்ளது.
2021 டிசம்பர் மாதத்தில் மட்டும் பாஸ்டேக் மூலமாக ரூ.3,679 கோடி சுங்கக் கட்டணம் வசூலாகியுள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு பாஸ்டேக் மூலமாக சராசரியாக ரூ.119 கோடி வசூலாகி உள்ளது. இந்த வசூலானது 2021 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ.502 கோடி அதிகரித்து உள்ளது. அதேபோல் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டு டிசம்பரில் சுங்கக் கட்டண வசூல் ரூ.1,375 கோடி அதிகரித்துள்ளது. 2020 டிசம்பரில் ரூ.2,304 கோடி வசூலானது. இது வரலாறு காணாத வசூலாக அமைந்துள்ளது.