டெல்லி: தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துங்கள் என மாநில அரசுகளுககு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநி சட்டப்பேரவையின் காலம் முடிவடைகிறது. இதையடுத்து, 5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில் ஒமிக்ரான் தொற்று பரவி வருவதால், தேர்தல் தள்ளி வைக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால்,  திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்றும், மாநில கட்சிகளும் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதாக தேர்தல் ஆணையர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.

இதையடுத்து, தேர்தல் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் 5 மாநிலங்களிலும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என மாநில தலைமை செயலாளருக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.