சென்னை: புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் நேற்று மட்டும் ரூ.147.69 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது சென்ற ஆண்டை விட குறைவு என அதிகாரிகள் அங்கலாய்த்துள்ளனர்.
கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு இடையில் ஒமிக்ரான் தொற்றும் பரவி மக்களை பீதிக்குள்ளாகி வருகிறது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பபாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மது விற்பனைக்கு மட்டும் தமிழகஅரசு தடை போடாமல் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், ஆங்கிலப்புத்தாண்டையொட்டி நேற்று மட்டும் மாநிலம் முழுவதும் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாக்கியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பையொட்டி, ரூ.153 கோடிக்கு மது விற்பனை ஆன நிலையில், இந்த ரூ.147.69 கோடிக்கு விற்பனையாக்கியுள்ளது. மதுவிற்பனை குறைந்ததற்கு அதிகாரிகள், விற்பனையாளர்களை கடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் தினசரி மது விற்பனை சரசரியாக ரூ.70 கோடிக்கு விற்பனை ஆவதாக கூறப்படுகிறது. அதுவே வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்கடிளல் ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரை விற்பனை ஆகும் என்று கூறப்படுகிறது. ஆனால், புத்தாண்டு மதுவிற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என்று டாஸ்மாக் அதிகாரிகள் வருத்தமடைந்துள்ளார்களாம். மது விற்பனை குறைந்துள்ளது ஏன் என்பது குறித்து விற்பனையாளர்களிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்களாம்.