ஸ்ரீநகர்

ன்று மாலை லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

லடாக் யூனியன் பகுதியில் இன்று மாலை 7.00 மணிக்கு திடீர் என நில நடுக்கம் ஏற்பட்டது.   இந்த நிலநடுக்கம் லடாக் யூனியன்  பிரதேசம் கார்கில் நகரில் இருந்து வடக்கு மற்றும் வடகிழக்கே 146 கிமீ தொலைவை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது.

தேசிய புவியியல் ஆய்வு மையம் இது ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவானதாக தெரிவித்துள்ளது.

அடுத்ததாக 7.01 மணிக்கு ஜம்மு காஷ்மீர் யுனியன் பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ஸ்ரீநகரில் இருந்து வடக்கே 130 கிமீ தொலைவை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது   தேசிய புவியியல் ஆய்வு மையம் இது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானதாகத் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கங்களின் போது கட்டிடங்கள் சற்று குலுங்கி உள்ளன.  மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.  இந்த இரு நிலநடுக்கங்களில் யாருக்கும்  எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது.