டில்லி

த்திய அரசு நிதி ஆயோக் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது

மத்திய அரசின் நிதி ஆயோக் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் ஒவ்வொரு பிரிவின் கீழும் தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது வழக்கமாகும். அவ்வகையில்  இன்று சுகாதாரத்துறைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்து சாதனை படைத்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

நிதி ஆயோக் வெளியிட்ட சிறந்த சுகாதாரத்துறை தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ள நிலையில் முதலிடத்தை அண்டை மாநிலமான கேரளா இடம்பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தினை தெலுங்கானா, நான்காவது இடத்தை ஆந்திரப்பிரதேச மாநிலமும் வரிசையாகப் பிடித்துள்ளன.

இப்பட்டியலில்  இறுதி இடத்தினை பெற்று மிக மோசமான செயல்பட்ட மாநில சுகாதாரத் துறைக்கான கடைசி இடம் பாஜக ஆளும்உத்தரப் பிரதேச மாநிலத்திற்குக் கிடைத்துள்ளது. பாஜகவினர் உத்தரப்பிரதேசம் மாதிரி மாநிலமாக உள்ளது என சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகையில் உபி மாநிலம் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.