மியான்மரில் நடக்கும் கொடூரங்கள்

*** மியான்மரில் கடந்த பிப்ரவரியில் இருந்து நடந்து வரும் ராணுவ ஆட்சியில், இட்லர், இடி அமீன் ஆகியோரை மிஞ்சும் அளவுக்குக் கொடூரமான ஆட்சி நடந்து வருகிறது!

மக்கள் இந்த ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்!

இந்த எழுச்சியைத் தாங்க முடியாத மியான்மர் ராணுவத்தினர், அப்பாவி மக்களைப் படுகொலை செய்து வருகின்றனர்!

இந்த பத்து மாதங்களில் சுமார் 1500 அப்பாவிப் பொது மக்களைக் கொன்று குவித்திருக்கின்றனர்!

கடந்த இரு தினங்களுக்கு முதன் யோ சோய் என்ற கிராமத்தில் ராணுவத்தை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த மக்களில் முப்பது பேரை இழுத்து வந்து சித்திரவதை செய்தனர்.!

பின்னர் அவர்களைக் கட்டிப் போட்டு ஒரு வேனில் ஏற்றி அப்படியே உயிரோடு கொளுத்தியிருக்கின்றனர்!

இந்த அரக்கச் செயலை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜனநாயக அமைப்புகள் அனைத்துமே கடுமையாகக் கண்டித்து இருக்கின்றன!

*** ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து தலைமறைவாகி இருக்கும்’ மாஜி’ ராஜேந்திர பாலாஜி எங்கே இருக்கிறார் என்றே தெரியாத சூழலில்…… தினம் தினம் அவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுகள் புற்றீசல் போல் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றன!

* ஓவியர் இரா. பாரி.