டெல்லி: 2022-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டில் மொத்தம் 16 அரசிதழ் விடுமுறைகள் மற்றும் 30 தடைசெய்யப்பட்ட விடுமுறைகள் உள்ளன.
மத்திய பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம், 2022ம் ஆண்டுக்கான வரையறை செய்யப்பட்ட விடுமுறை மற்றும் அரசிதழ் விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2022-ம் ஆண்டில் மொத்தம் 16 அரசிதழ் விடுமுறை நாட்களும், மற்றும் 30 வரையறை செய்யப்பட்ட விடுமுறைகள் உள்ளன. வரையறை செய்யப்பட்ட விடுமுறை என்பது விருப்ப விடுமுறை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் அந்த நாளில் அலுவலகத்தை மூடுவது கட்டாயமில்லை. ஆனால் அரசிதழில் வெளியிடப்பட்ட விடுமுறை என்பது அரசால் கட்டாய விடுமுறை ஆகும்..
2022-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் முழு பட்டியல் :
ஜனவரி 1: புத்தாண்டு தினம் (சனிக்கிழமை)
ஜனவரி 13: லோஹ்ரி – போகி பண்டிகை (வியாழன்)
ஜனவரி 14: மகர சங்கராந்தி – பொங்கல் பண்டிகை (வெள்ளிக்கிழமை)
ஜனவரி 26 – குடியரசு தினம் (புதன்கிழமை)
மார்ச் 1 – மகா சிவராத்திரி (செவ்வாய்)
மார்ச் 18 – ஹோலி (வெள்ளிக்கிழமை)
ஏப்ரல் 2: உகாதி (சனிக்கிழமை)
ஏப்ரல் 10: ராம நவமி (ஞாயிறு)
ஏப்ரல் 14 – மகாவீர் ஜெயந்தி, விஷு, மேஷாதி (வியாழன்)
ஏப்ரல் 15 – புனித வெள்ளி (வெள்ளிக்கிழமை)
மே 3 – ரம்ஜான் (செவ்வாய்)
மே 16 – புத்த பூர்ணிமா (திங்கட்கிழமை)
ஜூலை 10 – இத்-உல்-ஜுஹா/ பக்ரீத் (ஞாயிறு)
ஆகஸ்ட் 9 – முஹர்ரம் (செவ்வாய்)
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம் (திங்கட்கிழமை)
ஆகஸ்ட் 31: விநாயக சதுர்த்தி (புதன்கிழமை)
ஆகஸ்ட் 19 – ஜென்மாஷ்டமி (வெள்ளிக்கிழமை)
செப்டம்பர் 8: ஓணம் (வியாழன்)
அக்டோபர் 2 – மகாத்மா காந்தி பிறந்தநாள் (ஞாயிற்றுக்கிழமை)
அக்டோபர் 5 – தசரா (புதன்)
அக்டோபர் 24 – தீபாவளி (திங்கட்கிழமை)
நவம்பர் 8 – குருநானக் ஜெயந்தி (செவ்வாய்)
டிசம்பர் 25: கிறிஸ்துமஸ் (ஞாயிறு)