சென்னை:
திமுக -காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது என்று காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். காங்கிரஸ் -திமுக கூட்டணி கடந்த தேர்தலில் உருவானபோது ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்தவர் தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின். காங்கிரஸ் திமுகவுடன் மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து தொடர்ந்து செயல்படுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் செருப்பு எடுத்து காட்டியது குறித்து செய்தியாளர்களின் கேள்வி பதிலளித்த அவர், காட்டிய அந்த பொருளுக்கு என்ன மரியாதையோ அதே மரியாதை தான் அவருக்கும் என்று தெரிவித்தார்.