சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்பேத்கர் சுடர் விருது வழங்கி உள்ளது.

ஆண்டுதோறும் விடுதலை சிறுத்தை கட்சி விருது வழங்கும் விழாவைச் சிறப்பாக நடத்தி வருகிறது. அவ்வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைப் போல் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்குப் பெரியார் ஒளி விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு காமராஜர் விருது மற்றும் பி வி கரியமாலுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருது வழங்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel