சென்னை: அறநிலைத்துறை சார்பில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.3000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் திமுக அரசு பொற்பேற்றதும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவை பிறப்பித்தது. அத்துடன் கோயில் அர்ச்சகர் ஆக விரும்பும் அனைத்து சாதியினருக்கும் பயிற்சி அளிப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாடசாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச விடுதி ,உணவு ,அ த்துடன் ஊக்கத்தொகை ஆகியவை வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் ஆகிய பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000 ஊக்கத்தொகையை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தை, 18 மாணவர்களுக்கு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.