சென்னை
நடிகர் விஜய் உறவினரும் மாஸ்டர் படத் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.
சமீபத்தில் ஃபாக்ஸ்கான் செல்போன் நிறுவனம் மீது பல புகார்கள் எழுந்தன இதன் அடிப்படையில் அந்நி|நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை இட்டனர். மேலும் இந்நிறுவனத்துக்குத் தொடர்புடையோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை சேவியர் பிரிட்டோ என்பவரின் நிறுவனம் கையாண்டு வருகிறது. சேவியர் பீரிட்டோ நடிகர் விஜய்யின் உறவினர் ஆவார். இவர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சேவியர் பிரிட்டோ செல்போன் நிறுவனத்தின் ஏற்றுமதி இறக்குமதியைத் தனது நிறுவனத்தின் மூலம் கையாளுவதால் இந்த சோதனை நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.