புதுச்சேரி

ன்று புதுச்சேரியில் மழை நிவாரணமாகச் சிவப்பு ரேஷன் அட்டைக்கு  ரூ.5000 மற்றும் மஞ்சள் ரேஷன் அட்டைக்கு ரூ.4500 என வழங்கும் பணி தொடங்கியது.

கடந்த மாதம் புதுச்சேரியில் தொடர் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டு விவசாய நிலங்கள், சாலைகள் கடுமையாகச் சேதமடைந்தன.  கடந்த மாதம் 16 ஆம் தேதி புதுவை அரசு சார்பில் மழை நிவாரணமாகச் சிவப்பு ரேஷன் அட்டைக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

ஆனால் அனைத்து ரேஷன் அட்டைக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. எனவே அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என அரசு அறிவித்து கோப்புகள் தயாரிக்கப்பட்டு நிதித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கு நிதித்துறை ஒப்புதலைத் தொடர்ந்து மழை நிவாரணம் வழங்க ஆளுநர் அனுமதியளித்தார். இன்று ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் துவக்கி வைத்தார்.  அதாவது மஞ்சள் ரேஷன் அட்டைக்கு ரூ.500 குறைத்து ரூ.4,500ம், சிவப்பு ரேஷன் அட்டைக்கு ரூ.5 ஆயிரமும் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது.