யூ-டியூபில் தனக்கென 18 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை வைத்திருப்பவர் ஐந்து வயதே ஆன ரித்விக்.
ஆண் பெண் என வேறு வேறு கெட்டப்புகளில் வயது வித்தியாசமின்றி பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் ரித்விக் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாக இல்லாமல் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் தன்மை அறிந்து நடிக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்.
யூ-டியூப் தவிர ஒரு சில விளம்பரங்களில் தோன்றிய ரித்விக் இப்போது திரைத்துறையில் காலடி எடுத்துவைக்கிறார்.
நயன்தாரா நடிக்க இருக்கும் ஓ2 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் ரித்விக்.
ஜி கே வெங்கடேஷ் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒ2 திரைப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.