சென்னை: ஓபிஎஸ் கூறியது சசிகலாவுக்கு பொருந்தாது என அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
அதிமுக சார்பில் இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய ஓபிஎஸ், திருந்தியவர்களை ஏற்பதே தலைமைக்கு அழகு என்று கூறினார். இது சர்ச்சையானது. சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாகவே அவர் பேசியதாக கருதப்பட்டது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சிறுபான்மையினரை உணர்வுப்பூர்வமாக நேசிக்கும் இயக்கம் அதிமுக. பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து இந்தியாவில் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டனர். ஜெயலலிதா அரசு தமிழகத்தில் முழுமையான பாதுகாப்பு வழங்கி சிறுபான்மையினரை காத்ததுமனித குலம் தோன்றியது முதல் தவறிழைத்தல் இயல்பு.
திருந்தி வாழுவது மனித குலத்தின் சிறப்பு. சசிகலாவிற்கு மன்னிப்பே கிடையாது. ஓபிஎஸ் கூறிய கதைக்கு கண் காது மூக்கு வைத்து உருவம் கொடுக்காதீர். அந்த கதை பாமரர்களுக்கே பொருந்தும், சசிகலாவுக்கு பொருந்தாது. சசிகலா விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் உறுதியாகவே இருக்கிறார். சசிகலா இணைப்பு குறித்த அதிமுக உட்கட்சி விவகாரத்தில் அண்ணாமலை கருத்து கூறக்கூடாது, கருத்து கூறினால் அது தவறு என்றார்.
அம்மா வளாகம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், உதயநிதி, இன்பநிதி, சபரீசன், கனிமொழி பெயர்களில் காம்ப்ளக்ஸ்களை திமுக புதிதாக உருவாக்கிக் கொள்ளட்டும். ஆனால், ஜெயலலிதா பெயரில் உள்ள கட்டட பெயரை மாற்ற வேண்டாம் என்றும்,
முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு, சோதனை குறித்த கேள்விக்கு, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது என்றார்.
திருந்தியவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு! கிறிஸ்துமஸ் விழாவில் ஓபிஎஸ் சூசகம்…