சென்னை

விரைவில் தெற்கு மண்டலத்தில் 543  ரயில் நிலையங்களில் வைஃபை வசதியை ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்தியன் ரயில்வே ரயிலில் பயணம் செய்வோருக்கான வசதிகளை மேம்படுத்தி வருகிறது.  புதிய சேவைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது.  அவ்வகையில் இன்று இந்திய ரயில்வே ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள 543 முக்கிய ரயில் நிலையங்களில் விரைவில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இதன்மூலம் ரயிலில் பயணம் செய்வோர் தொடர்ந்து அரைமணி நேரம் இலவசமாக வைஃபை வசதியைப் பயன்படுத்த முடியும்.

விரைவில் சென்னை மண்டலத்தில் 135 நிலையங்கள், திருச்சி மண்டலத்தில் 105 மண்டலங்கள், சேலம் மண்டலத்தில் 79, மதுரை மண்டலத்தில் 95 நிலையங்கள், பாலககாடு மண்டலத்தில் 59 மற்றும் திருவனந்தபுரம் மண்டலத்தில் 70 என மொத்தம் 543 நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் எனத் தெரிய வந்துள்ளது.