சென்னை: 
சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கும்போது மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் பயில நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இது பேரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யக் குழுக்கள் அமைக்கப்பட்டது.
இந்த குழுக்கள் நடத்திய ஆய்வில், இடிந்து விழுந்து நிலையில் உள்ள பல பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கும்போது மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் பயில நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், அருகாமையில் பள்ளி இல்லையென்றால் வாடகை கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.