சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க பிரதமர் மோடி ஜனவரி மாதம் தமிழ்நாடு வர இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. பல மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப் பட்டு உள்ளன. அவற்றில் மொத்தம் 3,350 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் விடுபட்ட மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்தியஅரசிடம் கோரி, கடந்த ஆண்டு அனுமதி பெற்றது.
அதன்படி, விருதுநகர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டிணம், திருவள்ளூர், திருப்பூர், நீலகிரி, அரியலூர், கள்ளக் குறிச்சி ஆகிய11 மாவட்டங்களில் பதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் மேலும் 1,408 மருத்துவ இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
இந்த 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக வரும் 2022ம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வருகை #GoBackModi or #weclcomeModi-யா என்பது அப்போதுதான் தெரியவரும்.