சென்னை: ரூ.3கோடி மோசடி தொடர்பான புகாரில், அதிமுவைச் சேர்ந்தர முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு ரத்து செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதையடுத்து தலைமறைவான அவரை, கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வருவதாக விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.
ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக சுமார் 3 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கின் முக்கிய குற்றவாளயாக ராஜேந்திரபாலாஜி சேர்க்கப்பட்டு உள்ளார்.
இதற்கிடையில் அவர் தாக்கல் செய்ய முன்ஜாமீன் மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் தலைமையில் இன்று (17/12/2021) விசாரணைக்கு வந்தது. வாதங்களைத்ர தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை முழுமையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, காவல்துறையினர் கைது செய்வார்கள் என்ற அச்சத்தல், ராஜேந்திர பாலாஜி தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஒரு டி.எஸ்.பி., இரண்டு காவல்துறை ஆய்வாளர் தலைமையில் நான்கு தனிப்படைகளை அமைத்து விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த தனிப்படைகள் திருச்சி, சென்னை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளதாகவும், அங்கு ராஜேந்திர பாலாஜியைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.