சென்னை: அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், புதிய பிறழ்வு வைரசான ஒமிக்ரான் தொற்று ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில், தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.