சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘வாடா தம்பி’ இன்று ரிலீசானது.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் வாடா தம்பி பாடலை விக்னேஷ் சிவன் எழுத டி. இமான் இசையில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர்.

பிரியங்கா அருள் மோகன், சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகிவருகிறது.

சூர்யா நடித்து ஒடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்திற்குப் பின் திரையரங்கில் வெளியாக இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப்படம் பிப்ரவரி 4 ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.