கோவை: மண்சரிவு காரணமாக நிறுத்தப்பட்ட, மேட்டுப்பாளையம் ஊட்டி இடையேயான இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலைரயில் சேவை ரத்து வரும் (டிசம்பர்)  21ம்  தேதி வரை நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவித்து  உள்ளது.

நீலகிரியில் கடந்த 23 ஆம் தேதி ஹில்குரோவ் மற்றும் அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டு, மண் சரிவு அகற்றும் பணி நடைபெற்று வந்தது. தொடர்ந்து, டிசம்பர் 14-ம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  வடகிழக்கு பருவமழை காரணமாக, அந்த பகுதியில் மழை பெய்து வருவதால், அவ்வப்போது ஏற்படும் மண்சரிவு காரணமாக, மேட்டுப்பாளை யம் – ஊட்டி மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலை ரயில் சேவை ரத்து வரும் 21ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே அறிவித்து உள்ளது.