“இந்தியாவில் இன்று முதல் அதிகாரபூர்வ கரன்சியாக பிட்காயின் அறிவிக்கப்படுகிறது, அதற்காக மத்திய அரசு 500 பிட்காயின்களை இந்திய மக்களுக்கு விநியோகிக்கப்போகிறது” என்று பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிடப்பட்டது.

இந்த பதிவு வெளியான நேரத்தில் அவரது கணக்கு முடக்கப்பட்டதாகவும் சிறிது நேரத்தில் அந்த கணக்கை மீண்டும் மீட்டதாகவும் கூறப்பட்டது.

ட்விட்டர் நிறுவனத்திடம் இதுகுறித்து புகாரளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த பிரதமர் அலுவலகம் அந்த குறிப்பிட்ட நேரத்தில் வெளியான பதிவுகளை நீக்கியதோடு இதுகுறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

புகார் மீது விசாரணை நடத்திய ட்விட்டேர் நிறுவனம் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டவில்லை என்றும் அந்த குறிப்பிட்ட நேரத்தில் தங்களது சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பராக் ஒபாமா, ஜோ பைடன், ஜெப் பிஸாஸ், எலன் மஸ்க், பில் கேட்ஸ் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்கு பிட்காயின் ஸ்கேமர்களால் கடந்த ஆண்டு ஹேக் செய்யப்பட்ட நிலையில், தற்போது பிரதமர் மோடியின் ட்விட்டேர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து ட்விட்டர் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.