கத்ரீனா கைஃப் – விக்கி கௌஷல் திருமணம் ராஜஸ்தானில் உள்ள சிக்ஸ் சென்சஸ் பரவாரா கோட்டை-யில் டிசம்பர் 9 ம் தேதி நடந்தது.
மஞ்சள் நிற ஷராரா உடையணிந்து திருமணத்திற்காக மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் பறந்தார் கத்ரீனா.
முக்கிய விருந்தினர்கள் மட்டும் கலந்து கொண்ட மெஹந்தி, ஹால்தி எனும் நலங்கு சம்பிரதாயம் மற்றும் திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கத்ரீனா கைஃப் தனது ரசிகர்களுக்காக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த பிரபல ஆடை அணிகலன் வடிவமைப்பாளர் சப்யசாச்சி முக்கர்ஜி பிரத்யேகமாக வடிவமைத்த பட்டு லெஹெங்கா மற்றும் நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட அணிகலன்களுடன் மெஹந்தி நிகழ்ச்சியில் விக்கி கௌஷலுடன் ஆடிப் பாடி மகிழ்ந்தார் கத்ரீனா கைஃப்.
ஹால்தி மற்றும் திருமண நிகழ்ச்சிக்கும் லெஹெங்கா ஆடை அணிந்த கத்ரீனா சுபமுகூர்த்த வேளையில் பாரம்பரிய வழக்கப்படி சிகப்பு நிறத்தில் பட்டு துணியால் ஆன ஆடை அணிந்திருந்தார்.
நலங்கு நிகழ்ச்சியின் போது ஆர்கண்டி வகை துணியால் ஆன லெஹெங்கா அணிந்திருந்தார். மெஹந்தி, ஹால்தி மற்றும் முகூர்த்தம் அனைத்திற்கும் கத்ரீனா கைஃப் – விக்கி கௌஷல் இருவருக்குமான ஆடையை சப்யசாச்சி முக்கர்ஜி வடிவமைத்திருந்தார்.