பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டேர் பக்கம் சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதிவேற்றப்பட்ட ஒரு ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியதால் இதுகுறித்து விசாரித்தபோது அவரது ஐடி ஹேக் செய்யப்பட்டது தெரியவந்திருக்கிறது.

“இன்று முதல் இந்தியாவில் பிட்காயின் சட்டப்படி செல்லும்” என்று குறிப்பிட்டுள்ள அந்த பதிவில் “இதற்காக 500 பிட்காயின்களை வாங்கியிருக்கும் மத்திய அரசு அவற்றை பொதுமக்களுக்கு வழங்க இருக்கிறது” என்றும் குறிப்பிட்டது.

இந்த அதிர்ச்சி தரும் திடீர் அறிவிப்பு பிரதமரின் ட்விட்டர் பதிவில் இருந்து வெளியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் மேற்கொண்ட விசாரணையில், பிரதமரின் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் தெரியவந்தது.

இதுகுறித்து ட்விட்டேர் நிறுவனத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது, இதனைத் தொடர்ந்து பிட்காயின் குறித்த ட்வீட் நீக்கப்பட்டதோடு அவரது ஐ.டி. மீட்கப்பட்டுள்ளது.