சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயில் கும்பாபிஷேகம் 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ம் தேதி நடைபெறும் என்று இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ. குமரகுருபரன், கோவில் தக்கார் ஆதிமூலம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி ஆகியோருடன் சென்று கோயிலில் நடைபெறும் புனரமைப்பு வேலைகளை அமைச்சர் சேகர் பாபு நேற்று ஆய்வு செய்தார்.
அனைத்துப் பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு ஜனவரி 23 ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிவித்த அமைச்சர், கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளைப் பொறுத்து பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel