புதுடெல்லி:
இந்தியா, ஆபத்தான நாடுகள்’ பட்டியலிலிருந்து சிங்கப்பூரை நீக்கியுள்ளது.

இதுகுறித்த தகவலைச் சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் Facebook பக்கத்தில் அந்தத் தகவலைத் தெரிவித்தது.
அதன்படி, சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்லும் பயணிகள், கூடுதல் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளத் தேவையில்லை. தனிமைப்படுத்தும் கட்டுப்பாடுகளும் அவர்களுக்கு இருக்காது எனக் கூறப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து இஸ்ரேல் முதலிய நாடுகள் இந்தியாவின் ‘ஆபத்தான நாடுகள்’ பட்டியலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel