சென்னை

மிழகத்தில் இன்று 703 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,32,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,01,766 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,50,87,387 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 703 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இதுவரை 27,32,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கொரோனாவால் இன்று 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,560 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 728 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,88,142 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 7,946 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,58,997 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 3 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,622 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 92 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,49,140 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,235 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 117 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,51,167 பேர் பாதிக்கப்பட்டு 2,478 பேர் உயிர் இழந்து 2,47,442 பேர் குணம் அடைந்து தற்போது 1,247 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,74,257 பேர் பாதிக்கப்பட்டு 2,537 பேர் உயிர் இழந்து 1,71,099 பேர் குணம் அடைந்து தற்போது 621 பேர் சிகிச்சையில் உள்ளனர்.