சென்னை

ருணை அடிப்படையில் 11 பேருக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார்.

திமுக அரசு தமிழக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை சார்பில் சென்னை, மதுரை, கடலூர், திருநெல்வேலி, வேலூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மண்டலங்களில் இருக்கும் 11 சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்களைக் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.  இந்த கட்டிடங்கள் சுமார் 14 கோடியே 27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளன.

விருதாச்சலத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் அலுவலக கட்டிடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் கருணை அடிப்படையில் 11 பேருக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.